iPhone XS, XS Max, XR: பட்ஜெட் ஐபோன் முதல் ஆடம்பர ஐபோன் வரை: அசத்திய ஆப்பிள் லான்ச்
ரூ. 76,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் XR. 64 ஜிபி
இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன், இந்தியாவில் வரும் அக்டோபர் 26ம் தேதி
வெளிவருகிறது. இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 21ம் தேதி முதல்
தொடங்குகிறது.
5 வித நிறங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன் XR போனில் 6.1 இஞ்ச் அளவிலான
லிக்விடு ரெடினா டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்ட், முகத்தை
கணிக்கும் ஐடி, 120 ஹெட்ஸ் கொண்ட ஆடியொ போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஏ12 பையோனிக் எஸ்ஓசி உடன் கூடிய 6 சிபியூ
பெற்றுள்ளது. 4 ஜிபியூ கோர்ஸுடன் கூடிய நியூரல் எஞ்சின் இதில் உள்ளது.
இந்த போனின் முன்பக்க கேமரா 7 எம்.பி உள்ளது. அதேபோல பின்பக்க கேமரா 12 எம்.பி உள்ளது. ஐபோன் XR போன் 1080பி தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் முன்பக்க கேமரா 7 எம்.பி உள்ளது. அதேபோல பின்பக்க கேமரா 12 எம்.பி உள்ளது. ஐபோன் XR போன் 1080பி தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆப்பள், ஐபோன்கள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் புதிய படைப்புகளை அறிமுகம் செய்தது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பட்ஜெட் பயனாளர்களுக்கான புதிய மாடலையும் ஆப்பிள் நிறுவனம அறிமுகம் செய்தது.
Comments
Post a Comment